நடிகை ராதிகாவிற்கு என்ன ஆனது? திடீரென இப்படி ஆகிவிட்டதே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை ராதிகா சரத்குமார் படங்கள், சீரியல்கள் ஆகியவற்றில் குணச்சித்திர நடிகையாக இருந்து வருகிறார். அம்மா ரோல்களில் அவரை பல படங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். மார்க்கெட் இருக்கும்போது ஹீரோயின், பிறகு சீரியல் தயாரிப்பாளர், குணசித்திர நடிகை என தனக்கு தகுந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வந்தார். ஹீரோயினாக இருந்தாலும் சரி, குணசித்திர நடிகையாக இருந்தாலும் சரி அந்த ரோலில் இவர் நடிக்கிறார் என்றால் அந்த கதாபாத்திரம் டாப்பாக இருக்கும். 

ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் நடத்தி வந்த கட்சியை பாஜவில் இணைத்த நிலையில், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக ராதிகா அந்த கட்சிக்கு பிரச்சாரம் செய்தார். மேலும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடவும் இந்நிலையில் ராதிகாவுக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது.நடக்க முடியாமல் ஓய்வெடுத்து வரும் அவரை நடிகர் சிவக்குமார் நேரில் சென்று நலம் விசாரித்து இருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts