அப்படியெல்லாம் சொன்னார்கள், இப்போது வெளியே கூறும் நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை தன்ஷிகா. இப்போது பல படங்களில் ஹீரோயினாக, குணசித்திர நடிகையாக நடித்துவிட்டார். இருப்பினும் கூட இவர் நடித்த படங்கள் பெரிதாக இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. ஆயினும் அயராது உழைத்து வருகிறார். தற்போது ராதிகா இயக்கத்தில் உருவாகியுள்ள the proof என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வீடியோ வெளியானது. அதில் தன்ஷிகா படு கிளாமராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தன்ஷிகா பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர், நான் தமிழ் பொண்ணு தொடர்ச்சியாக பேசிக்கொண்ட இருப்பேன். ஆனால் என்னை அப்படி எல்லாம் பேசுக் கூடாது, இவ்வாறு தான் பேச வேண்டும் என்று சொன்னார்கள். 

நான் பிரவுன் நிறத்தில் இருப்பேன். அதனாலேயே என்னை அதிகம் மேக்கப் போட சொல்வார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் எனக்கு மிகவும் சங்கடத்தையே கொடுத்தன. ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது என கூறியுள்ளார். சாதாரணமாக ஹீரோயின் என்றால் எளிதாக அந்த இடத்திற்கு வந்துவிட்டார்கள் என நினைத்து விடுகிறார்கள். உண்மையில் அவர்கள் படும் அவமானம் என்னவெல்லாம் என்பதை சினிமாவை சேர்ந்த பலர் முன்வந்து பேட்டிகளில் கூறிவருகிறார்கள்.

Related Posts