நன்றிகெட்ட மனுஷன் அந்த மலையாள நடிகர் மோகன்லால்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சின்னத்திரை மட்டுமின்றி படங்களிலும் நடித்து வருபவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். முன்னதாக இவர் மெட்டி ஒலியில் கொடூரமான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் பலரும் அறியப்பட்ட நடிகையாக மாறினார். சாந்தி வில்லியம்ஸின் கணவர் வில்லியம்ஸ் மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்தவர். அவர் மோகன்லால், மாமூட்டி உள்ளிட்டோரை வைத்து பல படங்களும் தயாரித்து இருக்கிறாராம். தற்போது ஒரு பேட்டியில் பேசிய சாந்தி வில்லியம்ஸ் தனது கணவர் மோகன்லால் மம்மூட்டி உள்ளிட்டோருக்கு பல உதவிகள் செய்து இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர் இறப்புக்கு கூட வரவில்லை என அவர் தெரிவித்து இருக்கிறார். 

மம்மூட்டி வீட்டுக்கு வந்தால் அம்மா செய்ததை சாப்பிடுவார். மீன் குழம்பு வேண்டும் என அடம்பிடித்து வாங்கி உண்ணுவர், தான் உண்ணுவது மட்டுமின்றி கிச்சன் வரைவந்து சமைத்ததை கேரியரில் போட்டு செல்வார், ஒரு முறை மோகன்லாலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என எனது நகைகளை விற்று கொண்டு போய் கொடுத்தேன் . அப்போது நான் 9 மாதம் கர்ப்பமாக இருந்ததால் நடக்க கூட முடியாமல் கொண்டு போய் கொடுத்தேன். அதை எல்லாம் அவர் மறந்துவிட்டார். மோகன் லால் என்னை ஒருமுறை ஏர்போர்ட்டில் பார்த்துவிட்டு ஓடிப்போய்விட்டார் என கோபமாக சாந்தி வில்லியம்ஸ் கூறி இருக்கிறார். வளர்ந்த நடிகர்களுக்கு பின்னால் இவ்வளவு கேவலமான பின்னணி இருக்கும் என்பது சாந்தி போன்ற நடிகைகள் வெளியே வந்து கூறும்போது தான் தெரியவருகிறது, அதுவரை நல்லவர் வேஷம் தான் போடுகிறார்கள்.

Related Posts