இந்தச் செய்தி ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும் பயனர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. Gpay மூடப்படும் என்ற இந்த செய்தி உண்மைதான். இதை கூகுள் நிறுவனமே உறுதி செய்திருக்கிறது.அதாவது, கூகுள் பே தடை செய்யப் போவது இந்தியாவில் அல்ல.. அமெரிக்காவில் தான்.
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, கூகுள் பே ஆப்ஸ் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே வேலை செய்யும். அதேசமயம் மற்ற நாடுகளில் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, அனைத்து பயனர்களும் Google Wallet-க்கு மாற்றப்படுவார்கள். இந்த தேதிக்குப் பிறகு, Google Pay அமெரிக்காவில் முற்றிலும் பயனற்றதாகிவிடும். கூகுள் பே சேவை மூடப்பட்ட பிறகு, அமெரிக்கப் பயனர்களால் பணம் செலுத்தவோ பெறவோ முடியாது. கூகுள் அனைத்து அமெரிக்க பயனர்களையும் Google Wallet-க்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து | Thedipaar News