மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாசிலின் மகன் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர் தான் பகத் பாசில். என்னதான் சினிமா பின்புலம் இருந்தாலும் கூட தன் சொந்த முயற்சியால் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இந்த சினிமா உலகிற்கு தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர். மலையாளம் மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் செம பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கடந்த ஆண்டு இவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் மாஸ் வில்லனாக மிரட்டி வெற்றி கண்டார்.இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பகத் பாசில் அங்கு வந்திருந்த மருத்துவர் ஒருவரிடம், ADHD எனப்படும் கவனம் குறைபாடு ஹைபராக்டிவிட்டி கோளாறு எளிதில் குணப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மருத்துவர் சிறுவயதிலேயே கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்துவது எளிது என்றிருக்கிறார்.
பின்னர் 41 வயதுள்ளவருக்கு ADHD இருந்தால் அதை எளிதில் குணப்படுத்த முடியுமா என பகத் பாசில் கேட்டதன் மூலம் அவருக்கு அந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.Adhd என்பது நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடு, இது இருப்பவர்கள் அதிக மறதி கொண்டவர்களாக இருப்பார்களாம். இந்த வியாதி இவருக்கு தான் உள்ளதா என்பதை உர்ஜிதபடுத்தமுடியவில்லை என்றாலும், இவர் கேட்டுக்கொண்ட விதம் மற்றும் வயது இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, இவருக்கு தான் இந்த வியாதி உள்ளதா என்பது சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.