உலகம் முழுவதுமே சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களும், குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன.கருகலைப்பு என்பது பெண்களின் உரிமை என்று சட்டமாகவும் சில நாடுகளில் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தனிமனித உரிமையை அதிகளவில் மதிக்கும் அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை மிசோப்ரோஸ்டால், மைபெப்ரிஸ்டோன் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது கர்ப்பிணிகளுக்கு பல்வேறு விதமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இனி மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் அந்த மாத்திரைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது மீறி பயன்படுத்துபவர்களுக்கு 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி திட்டமாகவே பார்க்கிறேன்! ஐங்கரநேசன் | Thedipaar News