யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் மதுபான சாலை அனுமதியை நிறுத்த கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரபல்யமான பாடசாலைகள் ஆலயங்கள் தேவாலயங்கள் நீதிமன்றம் பொலிஸ் நிலையம் என்பவனத்திற்கு அண்மையாக மதுபான சாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் நடைபெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படுகின்றது.
இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மதுபான சாலையை நிறுத்த கோரி கையொப்பமும் பெறப்பட்டது.
ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் ஊர்காவற்த்துறை சிறுவில் வீதியில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற மதுபானசாலையை அனுமதியை நிறுத்த கோரி ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்துக்குள் பதாகைகள் தாங்கியவாறு உள் நுழைந்து ஊர்காவற்த்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி அவர்களிடம் மகஜரையும் கையளித்தனர்.
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு - இலங்கை மின்சார சபை! | Thedipaar News