நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 10 கோடி ருபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு அவர் உச்சத்தில் இருக்கிறார். அடுத்து அவர் அஜித் உடன் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இப்போதெல்லாம் நயன்தாரா எப்போது பார்த்தாலும் தனது குழந்தைகளை உறங்க வைக்கும் வீடியோக்கள் தான் வைரலாகி கொண்டு இருக்கின்றன. முன்னதாக நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வெளிநாடு செல்லும் புகைப்படங்கள் வைரலாகும். இப்போது குழந்தைகளுடன் நயன் ஏர்போர்ட் செல்வது, தூங்க வைப்பது போன்ற போட்டோக்கள் வைரலாகி கொண்டு உள்ளது.
இது எல்லா அம்மாக்களும் செய்வது தானே? ஆனால் நயன்தாரா செய்தால் மட்டும் வைரலாக்கப்படுகிறது? வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதற்கே இவ்வளவு பாசம் என்றால் பத்துமாதம் சுமந்து பெற்றிருந்தால் பாசத்தால் உருகியே இருப்பார் நயன்தாரா என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
தற்போது நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.
அங்கு அவர் ஷார்ட் உடையில் வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோக்கள் தாறுமாறாக வைரலாகி கொண்டு உள்ளது.