இயற்கை அனர்த்தங்களில் 20யை தாண்டிய உயிரிழப்புக்கள் l தொடரும் சிவப்பு அபாய எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

இன்று (05) அதிகாலை 06 மணிக்கு வெளியிடப்பட்ட இடர் முகாமைத்து அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் தலா 02 பேரும், கேகாலை மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தங்களில் 13 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மழையுடனான வானிலையினால் 13 மாவட்டங்களில் 65,777 குடும்பங்களைச் சேர்ந்த 2,47,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

41 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை, 3,887 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன், 4,162 குடும்பங்களைச் சேர்ந்த 15,735 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 2,592 குடும்பங்களைச் சேர்ந்த 10,820 பேர் 151 இடைதங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். P)


Related Posts