வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளை சுத்திகரிக்க நிதியுதவி l எவ்வளவு தெரியுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்திகரிப்பதற்காக அரசாங்கம் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா விதம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 44 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 4,477 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்தாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் நேற்று மாலை 6 மணி வரையான காலம் வரை, இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. (P)

கண்டுகொள்ளாத பாலிவுட் | அடம்பிடிக்கும் ஜோதிகா | jyothika | Thedipaar News

Related Posts