அமைச்சரை கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் பிரபலம் ஆன நடிகை. வெறும் நடிகை மட்டுமன்றி இரும்பு பெண்மணி போல பல அரசியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். அதனாலே இவருக்கு ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து இருக்கிறார். இதன் மூலமாக முதல் முறையாக எம்பியாக நாடாளுமன்றம் செல்கிறார் கங்கனா. இந்நிலையில் கங்கனா சண்டிகர் விமான நிலையம் வந்தபோது அங்கு பாதுகாப்பில் இருந்த பெண் CISF அதிகாரி கங்கனா கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். 

இந்த நிகழ்வு நடந்த சில மணிநேரம் விமான நிலையமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பரபரப்பு சூழ்ந்து கொண்டதால் பயணிகள் திக்குமுக்கு ஆடிப்போயினர். இதற்கு முன்பு விவசாயிகள் போராட்டம் பற்றி கங்கனா பேசிய பேச்சுக்காக தான் அவரை அறைந்ததாக அந்த பெண் கூறி இருக்கிறார்.போராடும் விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகள், அவர்கள் 100 ரூபாய்க்காக வந்து அமர்ந்திருக்கிறார்கள் என பேசியுள்ளார் கங்கனா. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்த பெண் போலீஸ் , நீ போய் அங்க உட்கார்ந்து இருப்பியா? என் அம்மா அங்கே தான் அமர்ந்திருந்தார் என அந்த போலீஸ் உரத்த குரலில் பேசி அறைந்துள்ளார்.ஆளும் கட்சி எம்பியான கங்கனாவை அடித்த பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது

Related Posts