புடவை போய் வெஸ்டர்ன் உடைக்கு மாறிய தாமரை! காசு இப்படியும் வேலை செய்யுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது அதில் கலந்துகொண்ட சிலருக்கு அவர்களது வாழ்க்கையையே மாற்றியுள்ளது. அதற்கு உதாரணமாக இப்போது பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த தாமரையை கூறலாம். கூத்துகட்டி தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தவருக்கு பிக்பாஸ் அவர்களது எதிர்க்காலத்தை மாற்றியது. இப்போது நிறைய சீரியல்கள், தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொண்டு வந்தவர் சொந்தமாக யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் சம்பாதித்து வருகிறார். தற்போது விஜய்யில் சின்ன மருமகள் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.வாழ்க்கையில் சரியாக வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த தாமரை வாழ்க்கை மாறியது. 

சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவிற்குள் வருபவர்கள், கூத்து கலைஞர்கள் என உண்மையான திறமைசாலிகள் சினிமாவிற்குள் வந்தால் மட்டுமே இனி நெபோட்டிசம் எனப்படும் வாரிசு நடிகர்கள் அல்லாத சினிமா துறை உருவாகும். இந்த நிலையில் தாமரை தனது கணவருடன் சேர்ந்து வெளிநாட்டிற்கு டூர் கிளம்பியுள்ளார். புடவையில் கலக்கிவந்த தாமரை செம மாடனாக விமான நிலையத்தில் கணவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக அட நம்ம தாமரையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். பிக்பாஸில் கலந்துகொண்ட போது, அப்பாவி தோற்றத்தோடு இருந்த தாமரை இப்போது வெளிநாட்டு பெண் போல உள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts