அறந்தாங்கி நிசாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! ஏன் இப்படி ஒரு மாற்றம்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி பலருக்கும் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் வாய்ப்பு கொடுத்தது.ஆண்கள் சாதித்து வந்த அந்த மேடையில் பெண் போட்டியாளராக தனது கணவரின் உதவியோடு களமிறங்கி சாதித்தவர் தான் அறந்தாங்கி நிஷா. பெண்கள் மீடியா துறைக்குள் வருவது என்பதே அரிது, அதிலும் காமெடி செய்து அதில் வெற்றியும் கண்டவர் அறந்தாங்கி நிசா. இப்போது படங்கள் நடிப்பது, சீரியல்கள், டிவி நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி என படு பிஸியாக உள்ளார். சொந்தமாகவும் ஒரு ஆடை கடையை திறந்துள்ளார், இதுதவிர மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். 

வெள்ள காலத்தில், கொரோனா காலத்தில் இவர் ஏழை எளிய மக்களுக்கு செய்த உதவிகள் பல. பிரபல நடிகர்கள், கோடியில் சம்பாதிக்கும் நடிகைகள் கூட நிசா அளவிற்கு உதவி இருக்க மாட்டார்கள். இவரை பற்றிய தற்போதைய செய்தி என்னவென்றால், கொஞ்சம் குண்டாக காணப்பட்ட அறந்தாங்கி நிஷா இப்போது 50 நாட்களில் 14 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.உடல் எடை குறைப்பிற்கு பிறகு அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோவை பதிவிட ரசிகர்கள் என்னது அறந்தாங்கி நிஷா அவர்களா இது என இன்ப அதிர்ச்சியில் கமெண்ட் செய்கின்றனர். எப்படி இந்த அளவிற்கு எடையை குறைத்தார் என்பதை நிசா பகிர்ந்து கொள்ளவில்லை.

Related Posts