இனி பிழைக்க 10% மட்டுமே வாய்ப்பு, நடிகையை கைவிட்ட மருத்துவர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவடைந்த ஒரு தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் அஸ்ரிதா. இணையத்தில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. பல சீரியல்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். அம்மா அப்பா என்ற சீரியல் மூலமாக நடிக்க தொடங்கியவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும் என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவரது சினிமா பயணம் மட்டுமே ஆறுவருடத்திற்கு மேல் இருக்கும். சீரியலை தாண்டி அஸ்ரிதா தெகிடி, திருமணம் எனும் நிக்கா,வனமகன் போன்ற பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் சந்தித்த பெரிய பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், தனது 23 வயதில் நடந்த விபத்தில், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து, இனி நடக்கவே முடியாது, உயிர் வாழவே முடியாது, பழைய நிலைக்கு திரும்புவதற்கு 10% தான் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்களாம். ஆனால் தன்னுடைய அம்மா மற்றும் தனது மன தைரியத்தின் காரணமாகவே ஒரு மாதத்திற்குள் மீண்டு வந்தேன் என்று தனது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் குறித்து கூறியிருக்கிறார். இவரது இந்த பேட்டிக்கு ரசிகர்கள் ஆதரவும் அன்பும் தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts