செஃப் தாமுவை தரக்குறைவாக பேசிய நடிகர்! என்ன நடந்தது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ 5ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்று வருகிறது. இந்த முறை ஷோ அவ்வளவு பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. காரணம் முக்கிய நபர்கள் எல்லோருமே சன்டிவி நடத்தும் குக்கிங் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் முதலில் போட்டியாளர்களுக்கு advantage டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் யார் அதிகம் பானி பூரி சாப்பிடுகிறார்களோ அவர்கள் தான் வின்னர் என கூறப்பட்டது. அதில் விடிவி கணேஷ் ஜெயித்தார். இந்த டாஸ்கில் ஜெயித்தால் அடுத்து நடக்கும் மெயின் டாஸ்கில் விடிவி கணேஷுக்கு இரண்டு சலுகைகள் தரப்படுவதாக செஃப் தாமு அறிவித்தார். 

 அதே போல விடிவி கணேஷ் சமைக்கும்போது, நடுவர்களே வந்து 5 நிமிடம் சமைப்பார்கள் என்கிற சலுகையையும் அவர் கொடுத்தார். ஆனால் அது எல்லாம் எனக்கு தேவையில்லை என கூறி செஃப் தாமுவை அசிங்கப்படுத்தினார் விடிவி கணேஷ். Too many cook spoil the soup என எல்லோர் முன்பும் கூறி இருக்கிறார். விடிவி தன்னை அசிங்கப்படுத்தினாலும் அதை செஃப் தாமு பாராட்டவே செய்தார். தாமு அவர்கள் தன்னை எத்தனை பேர் இந்த ஷோவில் கேலியாக கிண்டல் செய்தாலும் கூட அதை விளையாட்டாகவே எடுத்து செல்கிறார் என்பதால் இவருக்கு இணையத்தில் வரவேற்பு அதிகம்.

Related Posts