பொது நிகழ்ச்சியில் நமீதாவிற்கு ஏற்பட்ட சங்கடமான நிலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை நமிதா. படங்களில் நடித்தவர் பின்னர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். தற்போது இரு குழந்தைகளை பெற்றெடுத்து பிஸியான அம்மாவாக உள்ளார். அதுமட்டும் இன்றி சினிமாவில் விலகி இருக்கும் நடிகை நமிதா, தற்போது அதிகமாக அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நமிதா, தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.

 அதில் அவர், எனது உடல் மற்றும் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சினைகள் மற்றவர்களுக்கு தெரியாது.ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எனது எடை கூடிய உடல் புகைப்படத்தை குளோசப் ஆக வெளியிட்டு ஏதேதோ குறிப்பிட்டு இருந்தனர். அந்த விஷயம் எனக்கு ரொம்ப பாதித்தது. அதனால் நான் 25 கிலோ எடை வரை குறைத்தேன். இப்போது எல்லோரிடமும் இண்டர்நெட் வசதி இருப்பதால் மனதில் நினைத்ததை எல்லாம் வெளியே கொட்டுகிறார்கள். தவறாக பேசும் நபர்கள் மீது புகார் கொடுக்கலாம் என்று என்னிடம் கணவர் கூறினார். 

ஆனால் நான் வேண்டாம் என்று தெரிவித்ததாக நமிதா கூறியுள்ளார். பிரபல நடிகைக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்கள் இது போன்ற பிரச்சனைகளை நேர்கொள்ளும் போது எப்படி கையாளுவார்கள்? பாடி சேமிங் என்ற உடல் குறித்த குறை கூறுதலுக்கு தண்டனைகள் பெரிதாக இல்லை என்பதே இன்று பலருக்கு அட்வான்டேஜ்ஜாக போய்விட்டது என்பது பொதுவான கருத்து

Related Posts