GOAT படத்தில் விஜயகாந்த் வரும் காட்சி! விஜய் செய்வது சரியா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தினை பற்றியும் பல தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கி இருக்கிறது. படத்தில் விஜய் இதுவரை நடித்திராதகாட்சிகள் பல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல மறைந்த நடிகர் விஜயகாந்த்தை AI தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் திரையில் கொண்டு வர இருக்கின்றனர். அதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே தீவிரமாக உள்ளது. அதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஏற்கனவே பேட்டியில் உறுதிப்படுத்திவிட்டார். இந்நிலையில் தற்போது விஜயகாந்த் GOAT படத்தில் எவ்வளவு நேரம் வருவார் என்கிற தகவலை மகன் விஜய பிரபாகரன் கூறி இருக்கிறார். படத்தில் ஒரு நிமிடம் மட்டுமே விஜயகாந்த் காட்சி வருகிறதாம்.நடிகர் விஜய் ஆரம்பகால கேரியரில் தன்னுடன் நடிக்க வைத்து உதவி செய்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 

எஸ்ஏசி முன்னணி இயக்குனராக விஜயகாந்த்தை வைத்து பல படங்கள் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்திற்கு நன்றி செலுத்த வேண்டும் என்றால் அவரது மகனுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். விஜய்காந்த் அவர்கள் விஜய்க்கு தானே வாய்ப்பு கொடுத்தார்? அப்படி இருக்க விஜய், விஜயகாந்தின் மகனுக்கு தானே வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்? விஜயகாந்த்தை திரையில் கொண்டுவருவது கூட வியாபார யுக்தி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜயகாந்தை பார்க்க மக்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு வருவார்கள் என்பதாலே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts