டெம்போ வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சோப்டா என்ற பிரபல சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்கு செல்வதற்காக பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சுற்றுலா ட்ராவலர் வேன் ஒன்றில் 17 சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். 

அலக்நந்தா ஆற்றின் கரையோரம் உள்ள சாலையில் வேன் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள கிடுகிடு பள்ளத்தில் உருண்டு ஆற்றுக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

படுகாயம் அடைந்த 5 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts