கனடாவில் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி நபர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

43 வயதான மார்டின் பிள்ளை என்ற நபர் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கப்பம் கோரியதாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 பெண்களுடன் குறித்த நபர் உறவு வைத்துக் கெகாண்டதாகவும், இந்த தருணங்களை குறித்த நபர் காணொளியாக படமெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களின் அனுமதியின்றி இவ்வாறு படமெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மிரட்டப்பட்ட பல பெண்கள் பாலியல் தொழிலாளிகள் என சட்டதரணி தெரிவிக்கின்றனர்.

இந்த நபர் கடந்த 2019ம் ஆண்டு முதல் பெண்களுடன் தொடர்பு பேணி அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தும் போது பல்வேறு சாவல்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் வாடகைத் தொகை அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts