சன்னி லியோனுக்கு போட்ட தடை! மாணவர்களுக்கு இதெல்லாம் தேவையா??

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலமாக உலக அளவில் பிரபலம் ஆனவர். அவர் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டான்ஸ் ஆடுகிறார். அதன் மூலமாக அவருக்கு பெரிய வருமானமும் கிடைக்கிறது.சன்னி லியோன் கேரளாவில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டான்ஸ் ஆட இருந்தார்.

 அந்த நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் Kerala University அதற்கு தடை விதித்து இருக்கிறது.காலேஜ் யூனியன் இது போன்ற நிகழ்ச்சியை கேம்பஸ் உள்ளேயே அல்லது வெளியேவோ நடத்த அனுமதி இல்லை என்றும் கூறி இருக்கிறார். முன்னரெல்லாம் ஒரு கல்லூரி அல்லது பள்ளி விழாக்கள் என்றால் படித்து பெரிய பெரிய பதவிகளுக்கு போனவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சாதித்தவர்கள், பணி நிறைவடைந்த சாதனையாளர்கள் என  வாழ்வில் லட்சியத்தோடு வாழ்ந்தவர்களை தான் சிறப்பு விருந்தினராக அழைத்து வருவார்கள். ஆனால் இப்போதெல்லாம் யூடியூப் பிரபலம், ரீல்ஸ் போடும் பிரபலம் தான் இன்று கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள்.  அந்த வகையில் சன்னி லியோனை கல்லூரி விழாவிற்கு ஆட அழைப்பதால் அந்த மாணவர்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றும்? சிறப்பு விருந்தினர் ஒருவர் கல்லூரிக்கு வந்து ஊக்கமாக பேசுகிறார் என்றால் அவர் பேச்சு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் பட்சத்தில், மாணவர்கள் அந்த குறிப்பிட்ட நபர் குறித்து இணையத்தில் தேட ஆரம்பிப்பார்கள். இப்போது சன்னி லியோன் குறித்து இணயத்தில் தேட ஆரம்பித்தால் மாணவர்களின் நிலை என்னவாகும்?

 

 

 



Related Posts