பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு! நடந்த பரபரப்பு பின்னணி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி புரிந்து வருபவர் டில்லி ராணி. இவர் பணி முடிந்த பிறகு காவல் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் டில்லி ராணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப தகராறில் டில்லிராணியை அவரது கணவரே தாக்கியதாக கூறப்படும் நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக டில்லிராணி பிரிந்து வாழும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாலா பற்றி பரவும் தவறான செய்தி! உண்மையா? | Actor KPY Bala | Thedipaar News

Related Posts