கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை உச்சத்திற்கு கொண்டு சென்ற ஒரு தொடர் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசியின் கதை இப்போது விறுவிறுப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. பழனிச்சாமிக்கு அதாவது நடிகர் ரஞ்சித்திற்கு, பாக்கியாவை திருமணம் செய்துவைக்க அவரது அம்மா மற்றும் அக்கா பேசியதை கேட்டு கோபி கடும் கோபம் அடைகிறார். பாக்கியாவிடம் இதுகுறித்து கேட்டு பெரிய சண்டையே போடுகிறார். இந்த தொடரில் அமிர்தாவாக முதலில் நடித்து வந்தவர் ரித்திகா. கியூட்டாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் திருமணத்திற்கு பிறகு சுத்தமாக நடிப்பை நிறுத்தினார். இவருக்கு என்று இணையத்தில் பெரும் ரசிகர் கூட்டமே உண்டு. 

இந்த காலத்திலும் இப்படி ஒரு நடிகை.சில நடிகைகள் சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்துவிட்டு இணையத்தில் நீச்சல் உடை போட்டோக்களை பகிர்ந்து கொண்டு இருப்பார்கள். இவர் குடும்ப கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறார். சீரியலில் மட்டும் தான் இவர் இப்படி என்றால் சோசியல் மீடியாவிலும் மிகவும் குடும்ப பாங்காகவே இருக்கிறார். இதனாலே ரித்திகாவிற்கு இணையத்தில் ரசிகர்கள் ஏராளம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

Related Posts