நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்! மணப்பெண் யார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. அருவி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு வாழ் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து கவினுடன் இணைந்து டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். என்னதான் பிக்பாஸில் இவருக்கு எதிரான வாக்குகள் பதிவாகி இருந்தாலும் கூட இவருக்கு என்று இணையத்தில் ரசிகர்கள் உண்டு. இவர் பிக்பாஸில் இருந்திருந்தால் இவர் தான் வெற்றி பெற்று இருப்பார் என்பதை ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்த விஷயத்தில் கமலே ஒரு தலை பட்சமாக செயல்பட்டு விட்டார் என கமல் மீதே மக்கள் அதிருப்திகளை காட்டினார்கள். இந்த நிலையில், பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது என கூறி தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பிரதீப் பகிர்ந்துள்ளார்.

Related Posts