பாலா பற்றி பரவும் தவறான செய்தி! அது உண்மையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் காமெடியாக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் KPY பாலா. அவர் குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் தற்போது புது ஸோ ஒன்றை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். KPY பாலா தற்போது கஷ்டத்தில் இருக்கும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். அதை பற்றிய செய்திகள் தொடர்ந்து இணையத்தில் பரவி கொண்டிருப்பதால் அவர் அரசியலில் நுழைவதற்காக தான் இப்படி செய்கிறாரா என பலரும் கேட்டு வருகின்றனர். தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் என்னை அழைத்தாலும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என KPY பாலா கூறியதாக செய்தி பரவி இருக்கிறது. ஆனால் அது குறித்த உண்மை தன்மை இன்னும் வெளியாகவில்லை. பாலா எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு உதவுவது அவர் செய்யும் உதவிகளை பார்த்தாலே தெரியும். 

அவர் இப்போது மட்டும் உதவவில்லை சினிமாவில் தான் சம்பாதிக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்திலே உதவ ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக தன்னுடைய நட்பு வட்டாரத்திலே தெரிந்தவர்களுக்கு உதவ ஆர்மபித்தவர் மெல்ல மெல்ல ஏழை, எளியவர்களுக்கு, முதியவரக்ளுக்கு உதவ ஆரம்பித்தார். இதனால் மக்கள் இவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக எந்தவித பணம் பற்றிய எண்ணமும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வார் என எண்ணி இவரை அரசியலுக்கு அழைக்கிறார்கள். ஆனால் தனக்கு என்ன எண்ணம் உள்ளது என்பதை பாலா இன்னும் கூறவில்லை.

Related Posts