Font size:
Print
போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை சாரதிகள் இன்றி பொலிஸ் அதிகாரிகள் அகற்றுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அகற்றப்படும் வாகனங்களுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் செலவிடும் பணத்தை வாகன சாரதியோ அல்லது உரிமையாளரோ செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா மேலும் தெரிவிக்கையில், பொசன் வலயங்கள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க கிட்டத்தட்ட 27,000 சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும், பொசன் காலத்தில் கடமைக்காக 20,000 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். (P)
காணி உறுதிகளை வழங்கும் நடமாடும் சேவை | Thedipaar NewsRelated Posts