அரசியல் தலைவர்கள் ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விழுப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்கு பிறகு கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? கல்வராயன் மலைப்பகுதிகளில் அரசியல் அதிகாரம் உள்ளவர்களின் ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் காதுகளுக்கு கொண்டு சென்றும் இது தொடர்பாக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிகாரிகள் கவனத்திற்கு கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக தகவல் கொடுத்தும் அப்பாவி உயிர்கள் பறிபோனது. இதற்கு யார் பொறுப்பு.? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மன்னார் பிரதான சோதனைச் சாவடி அகற்றல் | Thedipaar News

Related Posts