பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5,00,000! 18 வயது நிரம்பிய உடன் கையில்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பல விஷயங்களை பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த பிறகுதான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை என இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். மேலும் பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்த குழந்தைகளுக்கு அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படுவதோடு அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும். மேலும் தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக அவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.5 லட்சம் வரவு வைக்கப்படும் என்றும் கூறினார்.

போயா தினத்தில் சாராய விற்பனை : யாழில் ஒருவர் கைது! | Thedipaar News

Related Posts