தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், நெல்லை மற்றும் சேலம் உள்ளிட்ட 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகள் உள்ளது. அதனைப் போலவே சென்னை கோடுவளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியும், ஓசூரில் மந்திரிகிரியில் கோழி இன உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும் செயல்பட்டு வருகின்றது.
இந்தக் கல்லூரியில் பி டெக் படிப்புகள் உள்ளன. இதற்கு நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதி இன்றுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால் வருகின்ற ஜூன் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு : 47 பேர் மரணம் | Thedipaar News