நயன்தாரா எடுத்த மோசமான முடிவு! அவரே கூறியது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சினிமாவாக இருக்கட்டும் சீரியலாக இருக்கட்டும் தமிழ் நடிகைகளை காட்டிலும் மலையாள நடிகைகள் தான் அதிகமாக உள்ளனர். கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாரா, ஐயா படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்க அரசு பேருந்தில் கோடம்பாக்கம் வந்து இறங்கிய நயன்தாரா இன்று தனி விமானத்தில் செல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக மாறினார். இந்நிலையில் நடிகை நயன்தாரா கஜினி படத்தில் நடித்தது குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

அந்த வீடியோவில், கஜினி திரைப்படத்தில் நடித்ததுதான் என்னுடைய வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு என எண்ணுகிறேன். கஜினியில் என்னுடைய கதாபாத்திரம் என்னிடம் சொல்லப்பட்டபடி எடுக்கவில்லை, கதாபாத்திரம் மோசமாக சித்தரிக்கப்பட்டது. இந்த விஷயத்தை எனது வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன் என்று நயன்தாரா கூறியுள்ளார்.

Related Posts