தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை சுனைனா. தமிழில் சில படங்களில் நடித்தாலும் இன்னும் பெயர் சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை. இவருக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள், யார் அந்த நபர்? அவரது முகத்தை காட்டுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்பவரை தான் சுனைனா திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனைனாவுக்கு இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
40 வயதான அல் அமேரி ஏற்கனவே திருமணமாகி அது விவகாரத்தில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழகான நடிகைகள் ஏன் தான் இரண்டாம் தாரமாக வாக்கு படுகிறார்களோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக வரலட்சுமி சரத்குமார் விவாகரத்தான ஆணுடன் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற தகவல் வெளியானது. அந்த நபருக்கோ வரலட்சுமி வயதில் ஒரு மகளே உள்ளார். இப்போது அந்த லிஸ்டில் சுனைனாவும் சேர்ந்துவிட்டார்.