இந்திய வம்சாவளி தொழிலதிபரான ரிஷி ஷா அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவில் வசித்து வந்தார். தனது அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடித் திட்டத்தால் தற்போது ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு அவுட்கம் ஹெல்த் நிறுவனம் போலி ஆவணங்களைத் தயாரித்து, 1 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்துள்ளதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் அம்பலப்படுத்தியது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களான கோல்டுமேன் சாக்ஸ், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளிட்டவையும் இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளன.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் நிறுவனர் ரிஷி ஷா, இணை நிறுவனர்களான பிராட் பர்டி, ஷ்ரதா அகர்வால் ஆகியோர் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கின் சாட்சியங்களை விசாரித்த நீதிபதி தாமஸ் டர்கின், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான பிராட் பர்டிக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களும், ஷ்ரதா அகர்வாலுக்கு மூன்று ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இலங்கையில் புதிய கண்டுபிடிப்பு | Thedipaar News