“பொதுமக்களை நசுக்கி அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது”- திறைசேரி செயலாளர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வெட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

பொதுமக்களை நசுக்கி இதுபோன்ற கோரிக்கையை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

இதேவேளை, தற்போதைய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என இந்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார் (P)


Related Posts