அப்படி என்ன இருக்கு இந்த புடவையில்? 3000 மணிநேரம் வேலைப்பாடு கொண்ட புடவை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்துவிடுகிறது. இவர் இருந்தாலே போதும் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். அண்மையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என பலர் நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி.இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் எல்லாம் ஆக்டீவாக கலந்துகொண்டார் தீபிகா படுகோனே. நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவர் கஷ்டப்பட்டு உட்கார்ந்து எழும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இவர் 2018ம் ஆண்டு ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டார், தற்போது 6 ஆண்டுகள் கழித்து இப்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவிற்கு அவர் அணிந்திருந்த ஆடை பற்றிய தகவல் தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. தற்போது தீபிகா ஒரு புடவையை அணிந்துள்ளார். இந்த புடவையின் விலை ரூ. 1.92 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த புடவையில் கையால் செய்யப்பட்ட எம்பிராய்டரி வேலைப்பாடுகள் உள்ளன, புடவை முழுவதும் உருவாக 3400 மணி நேரத்திற்கும் மேல் ஆனதாம். அப்படி சொல்லிக்கொள்ளும்படி இந்த புடவையில் என்ன உள்ளது? பெரிதாக பெண்களை கவர்ந்து இழுக்கும் வகையில் ஒன்றும் இல்லை என்று எப்போதும் போல் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் நம்ம ஊரு நெட்டிசன்கள்.

Related Posts