சூர்யா மற்றும் ஜோதிகா திருமணத்தில் கலந்துகொள்ள மறுத்த விஜய்காந்த் ஏன் தெரியுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகளும், மகனும் உள்ளனர். தமிழ்நாடே ஒரு சினிமா ஜோடியின் கல்யாணத்தை எதிர்பார்த்து இருந்தது என்றால் அது இவர்களின் திருமணத்தை தான். கோலாகலமாக சூர்யா-ஜோதிகா திருமணம் நடக்க பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இந்த ஜோடியை வாழ்த்தினார்கள்.ஆனால் நடிகர் விஜயகாந்த் மட்டும் திருமணத்திற்கு வரவில்லை, பத்திரிக்கை கொடுக்க வந்த சிவகுமாரிடமும் நான் வர மாட்டேன் என கூறியிருக்கிறார். ஏன் தெரியுமா?நான் இப்போது தான் கட்சியை துவங்கி இருக்கிறேன், இது பலருக்கும் பிடிக்கவில்லை. எப்போது கலகம் செய்யலாம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், இதனால் சூர்யாவின் திருமணத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது, அதனால் தான் நான் திருமணத்திற்கு வர மறுக்கிறேன் என கூறியிருக்கிறார்.

பின் திருமணம் முடிந்த பிறகு மணமக்களை நேரில் சந்தித்து விஜயகாந்த் வாழ்த்தி இருக்கிறார். விஜயகாந்த் அவர்கள் இறந்த பின்னர் அவர் குறித்த பல நல்ல விஷயங்கள் வைரலாகி வருகிறது. அவர் இருக்கும் வரை அவரை ட்ரோல் செய்தார்கள் இருப்பினும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வீறு நடைபோட்டார். இப்போது தமிழகம் நல்ல தலைவரை இழந்துவிட்டது என்று வருந்துகிறார்கள்.

Related Posts