சினிமா வேண்டாம், படிப்பு தான் வேண்டும் என சென்ற இந்த நடிகையின் கணவர் யார் தெரியுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை வித்யா தமிழில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அருண் விஜய்யின் தடம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்த வித்யா ஏராளமான படங்களில் சின்ன ரோல்களிலும் தோன்றி இருக்கிறார். முக்கியமாக சீரியல்களில் லீடிங் ரோலில் நடித்து வந்தவர். ஒரு நாள் தான் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருக்க போகிறேன் எனக்கு வெளிநாட்டில் நான் ஆசைப்பட்ட படிப்பு கிடைத்துள்ளது என வீடியோவை பதிவிடவே, அந்த வீடியோ வைரலானது. லைம் லைட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை திடீரென படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தது பெரிதாக பேசப்பட்டது.

 வித்யா பிரதீப் நடிகை என்பதை தாண்டி ஒரு சயின்டிஸ்ட் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அவர் ஸ்டெம் செல்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார். இவர் திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.நடிகை வித்யா பிரதீப் தான் 13 வருடங்களுக்கு முன்பே மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.வித்யா பிரதீப்பின் கணவர் அமெரிக்காவில் போட்டோகிராபர் ஆக பணியாற்றி வருகிறாராம். இப்போது இவர்களது புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Posts