அசால்ட்டாக பெருந்தன்மையை காட்டிய நயன்தாரா! குவியும் பாராட்டு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை நயன்தாரா மற்றும் கவின் இருவரும் ஜோடி சேர இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே செய்தி வெளியானது எல்லோருக்கும் தெரிந்தது தான். 34 வயது கவினுக்கு அவரை விட 5 வயது மூத்த நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்கிறாரா என பலரும் ஆச்சர்யமாக பேசினார்கள். அதுமட்டுமா?? நயன்தாராவோ லேடி சூப்பர் ஸ்டார், அப்படி இருக்க சின்ன நடிகருடன் ஜோடி சேர்வாரா? கண்டிப்பாக நயன்தாராவுக்கு ஜோடியாக இருக்காது, நயன்தாரா படத்தில் வேறு ஏதாவது துணை கதாபாத்திரமாக இருக்கும் என பல செய்திகள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க போகிறார்கள். படத்தின் கதையே வயது மூத்த பெண் மீது ஹீரோ காதலில் விழுவது போல தான். டாடா படத்திற்கு பிறகு கவின் நடித்த ஸ்டார் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை, அதனால் அடுத்து நயன்தாரா உடன் அவர் நடிக்கும் படம் மீது எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

இந்நிலையில் கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக நெருக்கமாகி இருக்கும் போட்டோவை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் வெளியானால் கவின் எங்கேயோ சென்றுவிடுவார். இந்த விஷயத்தில் நயன்தாராவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஏனெனில் நான் பெரிய நடிகை எனவே பெரிய நடிகருடன் தான் நடிப்பேன் என இல்லாமல், என்னதான் தான் பெரிய நடிகையாக இருந்தாலும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். இந்த விஷயத்தை பெரிய நடிகர்கள் செய்து விடுவார்களா? தான் பெரிய நடிகர் என்றால் தன்னுடன் நடிக்க பெரிய நடிகையை தானே எதிர்பார்ப்பார்கள்?

Related Posts