பிரபல நடிகைக்கு குவியும் வாழ்த்து! அடுத்த ரவுண்ட் ஆரம்பம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு தமிழில் போதுமான ரசிகர்கள் இல்லாவிடினும் தெலுங்கு சினிமா பக்கம் அம்மணி பிரபலம் தான். கன்னட திரையுலகின் மூலம் நடிகையாக தனது திரை பயணத்தை துவங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.கடந்த 2021ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு அழகிய மகளும் பிறந்தார். இந்த நிலையில் நடிகை பிரணிதா சுபாஷ் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இன்ஸ்ட்டாவில் Round 2… The pants don’t fit anymore! என பதிவிட்டுள்ளார். அதாவது இரண்டாவது முறையாக தான் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இனி தன்னுடைய உடை தனக்கு பொருந்தது என்றும் பதிவிட்டுள்ளார். இதற்காக ரசிகர்கள் பலரும் பிரணிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வரலாற்று புதிய சாதனை படைத்த சமரி அத்தபத்து | Thedipaar News

Related Posts