பிரபல நடிகைக்கு இரட்டை குழந்தை! குவியும் வாழ்த்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ஜுலி என்கிற விசாலாட்சி. இவரை பல படங்களில் குணசித்திர வேடத்தில் பார்த்திருப்பீர்கள். படங்கள், சீரியல் என திரையுலகில் இவருக்கு அனுபவம் அதிகம். இவரது பெயர் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இவரது முகத்தை சீரியலில் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. நடிகையாக கலக்கினாலும் இவர் டான்ஸராகவும் விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சிகளில் கலக்கினார். சத்யா சீரியல், சித்திரம் பேசுதடி போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்தது.

 இந்த நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்ட நிலையில் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் பேட்டி கொடுத்திருந்தார்.நடிகை ஜுலிக்கு சில தினங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில் நடிகை ஜுலிக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு மகன் மற்றும் மகள் பிறந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கடவுள் தாமதமாக குழந்தையை கொடுத்தாலும் கூட டபுளாக கொடுத்துவிட்டார்.

அதிக விலையில் பாண் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை | Thedipaar News

Related Posts