கணவருடைய பேச்சிற்கு மரியாதை கொடுத்து அதை செய்யாமல் இருந்த நடிகை! வெளியே சொன்ன சீக்ரெட் டயட்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோலிவுட்டில் கொண்டாடப்படும் நட்சத்திர காதல் ஜோடி என்றால் அது சூர்யா - ஜோதிகா தான். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோயினது ரீ என்ட்ரிக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. திருமணம் நடந்த கையோடு தனது குழந்தைகளுக்காக பத்துவருடம் செலவழித்து அவர்களை வளர்த்து ஆளாக்கிய பின்னர் மீண்டும் அதே வெறியோடு இப்போது சினிமாவில் இறங்கியுள்ளார். பத்துவருடம் எப்படித்தான் சினிமா வேட்கையை கட்டுப்படுத்தி வைத்தாரோ? 

தன்னுடைய கணவரது பேச்சிற்கு மரியாதை கொடுத்து இத்தனை வருடம் சினிமாவில் முகம் காட்டாமல் இருந்த ஜோதிகாவிற்கு இப்போது நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றி வாகையை சூடி கொடுக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.நடிகை ஜோதிகா பிட்னஸில் அதிகம் ஆர்வம் கொண்டவர், அடிக்கடி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஜோதிகா பின்பற்றும் டயட் பிளான் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, குறைந்த கலோரி பழங்கள், காய்கறிகளை அவர் உட்கொள்வதாக சொல்லப்படுகிறது. மேலும் வீட்டில் சமைத்த தென்னிந்திய உணவுகளை எடுத்துகொள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகைக்கு குவியும் வாழ்த்து | Thedipaar News

Related Posts