அசிங்கப்படுத்திய இயக்குனர் முன் ஆளாகி நின்று காட்டிய தமிழ்நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நடிகை, டான்ஸ் ஷோக்கள், பகுதி நேர வேலைகள் என தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி சினிமாவில் இப்போது ஹீரோயினாக உயர்ந்துள்ளார். தமிழ் நடிகைகளை புறக்கணிக்கும் சினிமா உலகில் முன்னணி தமிழ் நடிகையாக உள்ளார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர், என்னை பார்த்துவுடன், இந்தப் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகக் கூட இருக்க முடியாது திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று பேசினார். ஆனால் நான் அவர் சொன்னதை ஊக்கமாக எடுத்துக்கொண்டேன். வாழ்வில் முன்னேறி விட்டேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

ஜோதிகா சொன்ன சீக்ரெட் டயட் | Thedipaar News

Related Posts