Font size: 15px12px
Print
ரொறன்ரோ ரிச்மண்ட் ஹில் பகுதியில் தசைப்பிடிப்பு நிபுணர் கொஹுவா டோனி ஸீ, தனது வாடிக்கையாளர்களை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லெஸ்லி வீதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாலியல் ரீதியாக தம்மை தீண்டியதாக குறித்த வாடிக்கையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். 65 வயதான ஸீ மார்க்கம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த தசை பிடிப்பு நிபுணர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் பல்வேறு தசை பிடிப்பு நிலையங்களில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ
பெரும்பாக பகுதியில் பல இடங்களில் இவர் சேவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related Posts