Brampton தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கு இலங்கை எதிர்ப்பு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அமைப்பதற்கு கடந்த ஆகஸ்ட் 14ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனடிய தூதரை அழைத்து இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 

வாக்கு வங்கி அரசியலுக்காக முன்னெடுக்கப்படும் இது போன்று நகர்வுகளை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கனடிய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு நினைவுத்தூபி கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துகிறது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நினைவுத்தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய Brampton நகர முதல்வர் Patrick Brown இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

கனடிய உள்நாட்டு விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளை கண்டு அஞ்ச போவதில்லை எனவும் Patrick Brown கூறியிருந்தார்.

Related Posts