நுவரெலியாவில் மாபெரும் வினோத காற்றாடி திருவிழா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print



நுவரெலியாவில் முதல் முறையாக மாநகர சபை ஏற்பாட்டில் விசித்திர காற்றாடி திருவிழா சனிக்கிழமை (17) ஆரம்பமானது.

நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் இடம்பெறும் குறித்த காற்றாடி போட்டியில் பலவிதமான வண்ணங்களில் 200 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இணைந்து கொண்டு விசித்திர காற்றாடி செய்து அதனை வீரர்கள் தங்களது காத்தாடிகளை காட்சிப்படுத்தி பல வண்ணமய வினோதமான வடிவிலான பட்டங்கள் பறக்கவிடப்பட்டிருந்தன.

அழகிய வண்ணங்களில் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த மீன்கள், பறவைகள், நட்சத்திரங்கள் போன்ற விசித்திரமான ராட்சத காத்தாடிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட காற்றாடிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து வருகின்றனர் மேலும் நுவரெலியாவில் முதல் முறையாக காற்றாடி திருவிழா நடைபெற்றமையால் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

சனிக்கிழமை (17) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (18) என இரண்டு நாட்களுக்கு நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் விசேட கலாச்சார விளையாட்டு போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.

குறிப்பாக தற்போது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் கூடுதலான பார்வையாளர்கள் வருகைத்தந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான சிறப்பு பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டன. (P)

பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்த ஜனாதிபதி பொதுவேட்பாளர் | Thedipaar News

Related Posts