இலங்கை வருகின்றார் அமெரிக்காவின் உயர் அதிகாரி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் தற்காலிக உதவி செயலாளர் ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் இலங்கை வரவுள்ளார்.

ஓகஸ்ட் 17 முதல் 31ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு அவர் பயணம் செய்யவுள்ளார்.

அவரது பயணத்தின் போது, இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு, காலநிலை நெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவர் விவாதிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஓகஸ்ட் 19 முதல் 21 வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க ஆதரவளிக்கும் வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களைப் பார்வையிடும் அவர், காலநிலை மாற்றம் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கையர்களை இணைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வார்.(P)

யாழில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது | Thedipaar News

Related Posts