ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய பிரபல நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். வயதானாலும் உன்னோட ஸ்டைலும் அழகும் குறையவே இல்ல என்ற படையப்பா நீலாம்பரியின் வசனத்திற்கு ஏற்றவாறு இன்றும் உள்ளார்.  இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கடின உழைப்பால் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். கே. பாலசந்தர் இயக்கத்தில்  70களில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என இந்த மூன்று முக்கிய பிரபலங்கள் ஒன்றாக இணைந்து நடித்த படங்கள் பல. 

இன்று ரஜினியிடன்  நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் காத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதற்கு முன்பு இவருடன் இணைந்து 18 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை ஸ்ரீதேவியை சேரும். அந்த படங்கள் எல்லாமே வெற்றியையும் தழுவின. அதனாலே ரஜினி ஸ்ரீதேவி அம்மாவிடம் ஸ்ரீதேவியை பெண் கேட்டு சென்றதாக ஒரு தகவல் உண்டு. தற்போது இருக்கும் சினிமாவில் நடிகைகளை விட நடிகர்களுக்கு தான் அதிக சம்பளம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அந்த காலகட்டத்தில் நடிகர் ரஜினியை விட ஸ்ரீதேவி அதிக சம்பளம் வாங்கினாராம்.ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்திற்கு ஸ்ரீதேவி சம்பளமாக ரூ. 5 ஆயிரம், ரஜினிகாந்த் ரூ. 2 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. இப்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது


Related Posts