விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்! பின்பற்றாவிட்டால் என்னவாகும்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் நிறுவுதல் தொடர்பாக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, 

1. சிலைகள் நிறுவப்படும் இடத்தின் நில உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு துறைகளிடமிருந்து முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். 

2. மேலும், தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகளை பெற்றிருக்க வேண்டும். 

3. சிலையின் உயரம் அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொது இடங்களின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

5. சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்த்து, அரசு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இந்த புதிய வழிகாட்டுதல்கள், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பொது நலனையும் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சென்றவர் நான் கட்சி தாவப்போவதாக தெரிவிப்பு | Thedipaar News

Related Posts