திருப்பதி லட்டுக்கு இனி ஆதார் வேண்டா! இதிலும் முறைகேடா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி கோவில் லட்டு மிகவும் பிரபலமானது. இங்கு பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு மேற்கொண்டு லட்டு தேவைப்பட்டால் ரூ‌.50 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் தற்போது தேவஸ்தானம் லட்டு வாங்குவது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இடைத்தரகர்கள் முறைகேட்டாக லட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்காக இனி லட்டு வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும் மேற்கொண்டு தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல் இனங்களை நாடி யானை கூட்டம் | Thedipaar News

Related Posts