மிரட்டும் பேய் மழை: விஜயவாடாவில் ட்ரோன்கள் மூலம் உணவு விநியோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், 432 ரயில்களை தென் மத்திய ரயில்வே முழுமையாக ரத்து செய்துள்ளது.

விஜயவாடாவில் பல இடங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். இந்த இடங்களில் அதிகாரிகள், அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விஜயவாடா சிங்க் நகர் முற்றிலுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 

இப்பகுதியில் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் 81 முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் லோகேஷ் கூறினார்.

மக்கள் பொறுத்துக் கொண்டிருக்காவிட்டால் , எமது நாடு பங்களாதேஷாக மாறியிருக்கும் | Thedipaar News

Related Posts