மறியலை தடுக்க முயன்ற பெண் போலீஸ் மீது தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சாலை மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பி-யின் தலை முடியைப் பிடித்து இழுத்து சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் டிரைவர் ஒருவர் கொல்லப்பட்டார். கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அவர்களை அருப்புக்கோட்டை டிஎஸ்பி-யான காயத்ரி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் டிஎஸ்பி காயத்ரியை தள்ளிவிட்டு, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதனால், போலீஸாரும் மறியலில் ஈடுபட முயன்றவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரை கண்டித்து திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த எஸ்பி-யான கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். 

டிஎஸ்பி தாக்கப்பட்டது தொடர்பாக குமார், பொன்குமார் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், டிஎஸ்பி-யான காயத்ரி மீது தாக்குதல் நடத்திய ராமநாதபுரம் அருகே உள்ள நெல்லிகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் (43) என்பவரை கைது செய்தனர்.

29 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு | Thedipaar News

Related Posts