ஒன்ராறியோவுக்கான மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 5, 2024ல் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை (Bill 104) உறுதி செய்துள்ளது. தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சவால் நிராகரிக்கப்பட்டது.
இனி ஒன்ராறியோ மக்கள் தமிழ் இனப்படுகொலை குறித்து தொடர்ந்து கல்வி கற்றுக்கொள்ளவும் கற்பிக்கவும் பேசுபொருளாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது. மசோதா 104ஐ பாதுகாக்க 60க்கும் மேற்பட்ட தமிழ் பொது அமைப்புகள், சமூக உறுப்பினர்கள் அயராது உழைத்துள்ளன.
குறிப்பாக விஜய் தணிகாசலம் இவ்விடயத்தில் முன்னின்று பல சவால்களை எதிர்கொண்டு நீதி பெற்றுதந்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய் தணிகாசலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஒன்ராறியோவுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை உறுதி செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சவால் நிராகரிக்கப்பட்டது.
ஒன்ராறியோ தமிழ் இனப்படுகொலை குறித்து தொடர்ந்து கல்வி கற்கவும் கற்றுக்கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனுமதிக்கிறது. மசோதா 104 ஐப் பாதுகாக்க அயராது உழைத்த 60 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மசோதா 104 நிறைவேற்றப்பட்டது ஒன்ராறியோவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு இதுவொரு வரலாற்று தருணம் ஆகும் என விஜய் தணிகாசலம் கூறியுள்ளார்.
புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் பேரணி | Thedipaar News